ETV Bharat / state

'தெக்குச்சீமையில என்னைப் பத்தி கேளு' - தூத்துக்குடியில் ரெடியாகும் 300 கிலோ கிராம் கிறிஸ்துமஸ் கேக்..! - தூத்துக்குடியில் கேக் மிக்சிங் விழா

தூத்துக்குடி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 300 கிலோ கிராம் எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் விழா, தனியார் உணவு விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.

கேக் மிக்சிங் விழா
author img

By

Published : Nov 21, 2019, 3:17 PM IST

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கி விட்டன. ஆங்கிலேயர்கள் பழக்கத்தைப் பின்பற்றும் வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னரே, கேக் தயாரிக்கும் பணிகள் பல்வேறு நாடுகளில் தொடங்கப்படும்.

அதைப் போல், தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 300 கிலோ கிராம் எடை கொண்ட கேக் மிக்சிங் விழா நடைபெற்றது. இந்த விழாவைத் தொழிலதிபர் துரைராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும், ஜோ பிரகாஷ், கிப்சன், திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேக் மிக்சிங் விழா

இதுகுறித்து பொதுமேலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், "இந்த கேக் மிக்சிங் என்பது 17ஆவது நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கு உலர்ந்த முந்திரிப் பழங்கள், பாதாம் பருப்புகள், செர்ரி பழங்கள், பலதரப்பட்ட ஜாம் வகைகளுடன் உயர் தர மதுபானங்களையும் சேர்க்க வேண்டும். இந்த உலர்ந்த பழங்களிலும், மதுபானங்களிலும் உள்ள இனிப்பு தன்மையானது கிறிஸ்துமஸ் கேக் கெடாமல் பாதுகாக்கிறது.

இந்த கலவை நன்கு ஊறுவதற்கு ஏதுவாக மிகப்பெரிய காற்றுப் புகாத கொள்கலனில் வைத்து மூடப்படுகிறது. பழக்கலவையானது நன்றாக ஊறுவதற்கு ஏதுவாக வாரம் ஒருமுறை திறக்கப்பட்டு, நன்றாகக் கலக்கப்பட்டு கேக் தயாரிக்கப்படுகிறது. இந்த கலவை டிசம்பர் 20ஆம் தேதி இறுதியாக திறந்து, கேக் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தில் 1000 கிலோ கேக் - கண்கவரும் காணொலி!

Intro:தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் விழா
Body:தூத்துக்குடி

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 300 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கி விட்டது. கிறிஸ்துமஸ் தொடங்குவதற்கு ஒருமாதத்திற்கு முன்பாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தூத்துக்குடி டி.எஸ்.எப். கிராண்ட் பிளாசா ஹோட்டலில் கேக் மிக்சிங் விழா நடைபெற்றது.

விழாவுக்கு தொழிலதிபர் துரைராஜ் தலைமை தாங்கினார். ஜோ பிரகாஷ், கிப்சன், திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கேக் மிக்சிங் விழா குறித்து பொதுமேலாளர் சுப்பிரமணியன் கூறுகையில்,
இந்த கேக் மிக்சிங் என்பது 17வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கு உலர்ந்த முந்திரிப் பழங்கள், பாதாம் பருப்புகள், செர்ரி பழம், மற்றும் பலதரப்பட்ட ஜாம் வகைகள் இத்துடன் உயர்தர மதுபானங்களையும் சேர்க்க வேண்டும். இந்த உலர்ந்த பழங்களிலும், மதுபானங்களிலும் உள்ள இனிப்புதன்மையானது கிறிஸ்துமஸ் கேக் கெடாமல் பாதுகாக்கிறது. இறுதியாக உயர்தரமான மதுபானங்கள், பழரசங்கள், தேன் ஆகியவை நன்றாக ஊறுவதற்கு ஏதுவாக சேர்க்கப்படுகிறது. பின்னர் பழக்கலவையானது மிகப்பெரிய காற்று புகாத கொள்கலனில் வைத்து மூடப்படுகிறது. பழக்கலவையானது நன்றாக ஊறுவதற்கு ஏதுவாக வாரம் ஒருமுறை திறக்கப்பட்டு நன்றாக கலக்கப்பட்டு கேக் தயாரிக்கப்படுகிறது. இந்த கலவை டிசம்பர் 20-ந்தேதி கேக் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.