தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (45). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் அஜித்குமார்(25), செல்வம்(28). சுப்பையா(51). இவர்கள் 4 பேரும் இன்று (ஜூன்.20) காலை தூத்துக்குடியில் இருந்து பசுவந்தனை அருகே உள்ள கொப்பம்பட்டியை அடுத்த புதுப்பட்டியில் நடந்த நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு மாலை ஊருக்கு திரும்பி கொண்டியிருந்தனர்.
புதுப்பட்டியில் இருந்து கொப்பம்பட்டி செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் உயிரிழந்தார். தகவலறிந்த, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த அஜித்குமார், செல்வம், சுப்பையா ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்குறித்து கொப்பம்பட்டி காவல்தூறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர்: போக்சோவில் கைது!