ETV Bharat / state

பாஜகவின் வேல் யாத்திரை இன்று நிறைவு!

தூத்துக்குடி: நிவர் புயல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வேல் யாத்திரையின் நிறைவு விழா இன்று திருச்செந்தூரில் நடக்கிறது.

vel yatra concludes
vel yatra concludes
author img

By

Published : Dec 7, 2020, 8:51 AM IST

தமிழ்நாடு பாஜக கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி முதல் வேல் யாத்திரையை தொடங்கி நடத்திவந்தது. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த வேல் யாத்திரை, திருச்செந்தூரில் இன்று நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது. திருச்செந்தூரில் நடைபெற உள்ள வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நிகழ்ச்சி நடக்கும்” என்று தெரிவித்து இருந்தார்.

திருச்செந்தூரில் பாஜகவின் வேல் யாத்திரை நிறைவு கூட்டத்தை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிறைவு நாள் கூட்டத்தில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பார் என பாஜக அறிவித்திருந்தது.

இதையும் படிங்க:தடையை மீறி வேல் யாத்திரை நடக்கும் - எல்.முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.