ETV Bharat / state

நாளை திட்டமிட்டப்படி வேல் யாத்திரை நிறைவு கூட்டம் நடைபெறும் - பாஜக தலைவர் முருகன்! - நாளை திட்டமிட்டப்படி வேல் யாத்திரை நிறைவு கூட்டம் நடைபெறும்

தூத்துக்குடி: நாளை திட்டமிட்டப்படி வேல் யாத்திரை நிறைவு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் முருகன் செய்தியாளர் சந்திப்பு

author img

By

Published : Dec 6, 2020, 4:50 PM IST

தமிழ் கடவுள் முருகனுக்குரிய போற்றுதல் பாடலான கந்த சஷ்டி கவசத்தை அருவறுப்பாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் சித்தரித்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் நபர்களை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு பாஜக கடந்த நவம்பர் 6ஆம் தேதி வேல் யாத்திரையை தொடங்கியது.

இந்த யாத்திரை நாளை திருச்செந்தூரில் நிறைவுபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் இன்று (டிச. 6) திருச்செந்தூரில் 3அடி உயர வேலுடன் சாமி தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், “பாஜக சார்பில் வேல் யாத்திரை கடந்த நவம்பர் 6ஆம் தேதி சஷ்டி தினத்தன்று திருத்தணியில் தொடங்கப்பட்டது. கந்த சஷ்டி கவச பாடலை அருவறுக்கத்தக்க வகையில் சித்தரித்து வெளியிட்ட நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகிறோம்.

இதன் நிறைவு விழா நாளை திருச்செந்தூரில் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்” எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவர் முருகன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், திருச்செந்தூரில் நடைபெற உள்ள வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி தமிழக அரசின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். தமிழ்நாடு அரசு வேல் யாத்திரை மற்றும் அதுசார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி வழங்கவில்லையே என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘கண்டிப்பாக நாளை கூட்டம் நடைபெறும்’ என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டு எல். முருகன் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

இதற்கிடையே, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் மீறி பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டவிரோதமாக கூடினாலோ அவர்கள்மீது சட்டரீதியிலான வழக்குப்பதிவு செய்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க...கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மண்பாண்டத் தொழிலாளர்கள்: கை கொடுக்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.