தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (22), வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராஜ் (19), மாரிசெல்வம் (20) ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக புதியம்புத்தூர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இவர்களை சிறையில் அடைப்பதற்காக புதியம்புத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில், காவலர் சுடலைமுத்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
அப்போது சிறை அருகே வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாயகிருஷ்ணன் கதவை திறந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து தப்பியோடிய மாயகிருஷ்ணை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர்.
ஆனால், மாயகிருஷ்ணன் கடந்த இரு நாள்களாக காவல் துறையினர் வசம் சிக்காமல் ஊர் ஊராக தலைமறைவாக இருந்துவந்தார். இதைத்தொடர்ந்து சிப்காட் காவல் எல்லைக்குள்பட்ட தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் அவர் பதுங்கியிருப்பதாகத் தனிப்படைக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அங்கு விரைந்துசென்ற தனிப்படையினர் மாயகிருஷ்ணனை கைதுசெய்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சொத்து தகராறில் கொலை மிரட்டல்: கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி!