ETV Bharat / state

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்: வெறிச்சோடிய துறைமுகம் - விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில், விசைப்படகு உரிமையாளர்கள் அதிகளவு பணத்தை பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிடக்கோரி, மீனவத் தொழிலாளர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைப்படகு உரிமையாளர்கள்
விசைப்படகு உரிமையாளர்கள்
author img

By

Published : Feb 8, 2023, 5:32 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தினமும் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்கின்றன. இந்தப் படகுகளில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

மீன்பிடித்தொழிலில் கிடைக்கும் லாப, நஷ்டத்தில் உரிமையாளர்களுக்கு 61 சதவீதமும் தொழிலாளர்களுக்கு 39 சதவீதமும் என்ற அடிப்படையில் பங்கு பணம் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு படகுக்கும் வட்ட பணம் என்ற பெயரில், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய 10 முதல் 14 சதவீதத் தொகையை, உரிமையாளர்கள் பிடித்தம் செய்வதாக, மீன்பிடித் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தங்களுக்கு வர வேண்டிய பணம் அதிகளவு பிடித்தம் செய்யப்படுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

அதிகளவு பணம் பிடித்தம் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும்; 6 சதவீதம் மட்டுமே வட்டப் பணம் பிடித்த செய்ய வேண்டும் என்றும்; 6 நாட்களும் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள மீனவர்கள், இகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மீன்வளத்துறை சார்பில் விசைடப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர் இடையே எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 6-ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், இன்று (பிப்.8) 3-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்தனர்.

மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க: முறைகேடாக 1,813 கழிவுநீர் இணைப்பு.. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.