ETV Bharat / state

'மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கவில்லையெனில் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்'

author img

By

Published : Nov 2, 2020, 6:08 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாடு சட்ட விதிமுறைகளின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனில் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என சீர்மரபினர் நல;d சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

thokthukudi district news
backward class welfare association

தூத்துக்குடி மாவட்ட சீர்மரபினர் நலச் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை இன்று (நவ. 03) சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மருத்துவ இட ஒதுக்கீட்டில் 15% அகில இந்திய தொகுப்பில் ஒதுக்கீடும், 85% மாநில அரசின் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால் தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டவிதிகளின்படி 18% எஸ்.சி.க்கும், 1% எஸ்.டி.பிரிவினருக்கும், 30% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் சட்டத்தை தவிர வேறு எதுவும் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டு சட்டத்தை கட்டுப்படுத்தாது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள மருத்துவ கவுன்சில் இட ஒதுக்கீடு அறிவிப்பு தமிழ்நாடு மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு சட்டம் வழங்கிய உரிமைகளை அரசு பாதுகாக்கத் தவறினால் இனி நாங்கள் தேர்தலில் வாக்களிப்பதில் எந்தப் பயனும் இல்லை.

எனவே தமிழ்நாடு சட்ட விதிமுறைகளின்படி மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் வரும் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.