தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (42). ராணுவத்தில் ஹவில்தாராகப் பணியாற்றிவரும் இவர் 2009ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி, ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்பு அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவரை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டார்.
புலன் விசாரணை
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் அப்போதைய மத்தியபாகம் காவல் ஆய்வாளர் வீமராஜ் வழக்குப்பதிவு செய்து, ராம்குமார் என்பவரைக் கைதுசெய்து புலன் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தார்.
பத்தாண்டு சிறை
இவ்வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் இன்று (மார்ச் 9) குற்றவாளி ராம்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.