ETV Bharat / state

ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல - ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள்

author img

By

Published : Apr 27, 2021, 7:44 AM IST

Updated : Apr 27, 2021, 1:06 PM IST

தூத்துக்குடி: ஆக்சிஜன் வாயு உற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல என ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் 15 உயிர்கள் பலியானதைத் தொடர்ந்து அரசின் ஆணைப்படி ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டது.

இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்துவருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக திறக்க அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடி தீர்த்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் வேதாந்தா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தற்போதுவரை நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே கரோனா தொற்று அதிதீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. தொற்றினால் மருத்துவமனையில் பல்லாயிரக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையை ஆக்சிஜன் பற்றாக்குறையினால் கரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்தவர்கள் பலர் உயிரிழந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து மக்களுக்கு இலவசமாக வழங்க வேதாந்தா நிறுவனம் தயாராக உள்ளது.

நாளொன்றுக்கு 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட அலகில் முதற்கட்டமாக 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதைப் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இலவசமாக வழங்க அனுமதி தர வேண்டும் எனக் கூறியிருந்தது.

ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல - ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள்

இந்த மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்ற விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் கடந்த வாரம் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்களிடையே கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், வியாபாரிகள், வணிக சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் காப்பர் ஆலை எந்தக் காரணம் கொண்டும் திறக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடாது என எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தினர். அன்றைய தினம் கூட்டத்தில் பங்கேற்கவந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்களைக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் விரட்டி அடித்த சம்பவங்களும் நடைபெற்றன.

ஸ்டெர்லைட் ஆலையில் அரசு ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்குவதற்கும் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட கருத்துகள் அனைத்தையும் அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பினார்.

இந்தச் சூழலில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தவும் கருத்துகள் கேட்பதற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நான்கு மாதத்திற்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டுமே மின்சார இணைப்பு வழங்கப்படும், இதனைக் கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், போராட்டக் குழுக்கள், ஆதரவாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் அடங்கிய கண்காணிப்புக் குழுவினை நிறுவுவதற்கும் தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது குறித்து பொதுமக்களும், எதிர்ப்பாளர்களும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குப் பிரத்யேகமாக அளித்த பேட்டியில், "தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கிய நாசகார ஸ்டெர்லைட் ஆலை 15 உயிர்களைப் பலி கொண்டபின் இழுத்து மூடப்பட்டது.

இந்தச் சூழலில் ஆக்சிஜன் வாயு தட்டுப்பாடு என்ற மாய பிம்பத்தின் மூலமாக ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் மீண்டும் திறப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது தமிழ்நாட்டில் கிடையாது. அது செயற்கையாக உருவாக்கப்படுகிறது.

ஏனெனில் ஆக்சிஜன் தேவையில் தன்னிறைவான நிலை நமது நாட்டில் உள்ளது. உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் வாயுவை தேவைப்படும் இடங்களுக்கு கொண்டுசெல்வதில்தான் பிரச்சினை உள்ளது.

குறிப்பாக ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களுக்கு அதனைக் கொண்டுசெல்ல சரியான போக்குவரத்து வசதிகளும், வாயு உருளைகளுக்கும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே ஆக்சிஜன் உற்பத்திக்குத் தட்டுப்பாடு என்பது கிடையாது.

எனவே ஆக்சிஜன் வாயுவைத் தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டுசெல்வதில் உள்ள பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சி எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது.

அதையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படுமெனில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள தாமிர உற்பத்தி அலகுகள் அனைத்தையும் பிரித்தெடுத்து நிரந்தரமாக அளித்த பின்னர் அரசு அந்த நிலத்தை கையகப்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கலாம். அதற்கு நாங்கள் உடன்படுகிறோம்.

ஏனெனில் உலகத்திலேயே மூச்சுக் காற்றுக்காகப் போராடி 15 உயிர்களை இழந்த மண் தூத்துக்குடி. எனவே காற்றின் அருமை என்ன என்பதும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதை விடுத்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்ற நோக்கோடு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டால் தூத்துக்குடியில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்" என்றனர்.

இதையும் படிங்க: மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது' - திருமாவளவன்

Last Updated : Apr 27, 2021, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.