தூத்துக்குடி: பல்வேறு கலந்தாய்வு கூட்டம், ஆய்வு பணிகளை பார்வையிட சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்,
ஜெருசலம் செல்ல ஆண்களுக்கு 32ஆயிரம் கன்னியாஸ்திரி பெண்களுக்கு 60ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. அதே போன்று இஸ்லாமியர்கள் புனித ஹச் பயணம் செல்ல விரும்புவோருக்கும் தமிழ்நாடு அரசு மானியம் வழங்குகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு 1741 பேருக்கு மானியம் வழங்குகிறது. கேரளா, கொச்சின் விமானம் மூலம் வழியனுப்பபட்டு வருகிறது.
சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வாரியம் அமைக்கப்பட்டு அதில் சட்டங்கள், திட்டங்கள் மூலம் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்து வருகிறது. இலங்கை வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டில் 106 இடங்களில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த காலத்தில் வீடு கட்டி கொடுத்தார்.
அது 30 ஆண்டுகாலத்திற்கு மேலாக உள்ளதால் அதனை பழுது பார்க்க 317 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு மாவட்டங்களில் அப்பணி நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் 123 கோடி ரூபாய் மதிப்பில் அரிசி, பால் பவுடர், மருந்து போன்ற பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. என்று கூறிய அவர், திமுகவின் கொள்கையோ லட்சியமோ அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை.
திராவிட முன்னேற்ற கழகம் அடித்தட்டு மக்கள் சமநிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல, திமுக கட்சி அடிப்படை உரிமைகள் பெற்ற காரணத்தினால் தான் அண்ணாமலை போன்றோர் ஐபிஎஸ், ஐஏஎஸ் படிக்கும் சூழலை உருவாக்கி கொடுத்துள்ளது.
தந்தை பெரியார், அம்பேத்கரை பற்றி புரிந்து கொள்ளாமல் அதன் நோக்கத்தை பற்றி அறியாமல் மாற்று மனப்பான்மையில், இருக்கும் கொள்கை இல்லாத, லட்சியம் இல்லாத தனக்கு நாட்டு மக்கள் அடிமையாக இருக்கும் வேண்டும் என எண்ணும் கூட்டத்தில் அண்ணாமலை சிக்கி தவிக்கிறார், வரும் காலத்தில் அவர் புரிந்து கொள்வார், என கூறினார்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அதிரடி திட்டம்