தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிவருகின்றன. திருச்செந்தூர் தொகுதி 15 பொதுத்தேர்தல்களையும், 1 இடைத் தேர்தலையும் சந்தித்துள்ளது. அதில் திமுக 7 முறை வெற்றி வாகை சூடியது.
தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் தற்போதுவரை நான்கு பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் என ஐந்து தேர்தல்களில் வெற்றிபெற்று 20 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவருகிறார்.
இந்நிலையில் இந்த முறையும் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணனை பின்னுக்குத் தள்ளி 21,744 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.