ETV Bharat / state

‘பதவி மமதையில் பேசுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்’ - டிடிவி - எடப்பாடியை விமர்சித்த தினகரன்

தூத்துக்குடி: பதவி மமதையில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசும் முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு காலம் தக்க பாடம் புகுட்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
author img

By

Published : Nov 25, 2019, 8:45 PM IST

தூத்துக்குடியில் நடந்த அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ‘துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொய்யை உண்மையாக்கி பேசும் திறன் பெற்றவர். மாநகராட்சி மேயரை, கவுன்சிலர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் எதற்கு பணம் வசூலிக்க வேண்டும். எதற்கு இந்த மாற்றம். இவர்களே ஆட்களை தயார்படுத்தி நீதிமன்றத்துக்கு அனுப்பி உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஏற்பாடு செய்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் எப்படி ஆட்சியை ஏற்படுத்தினார்களோ அதேபோல் மகாராஷ்டிராவிலும் இன்றைக்கு ஜனநாயக படுகொலை நடந்துள்ளது’ என்றார்.

டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு

மகாராஷ்டிராவில் நடந்திருப்பதை ஜனநாய படுகொலை என்று திமுக விமர்சித்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘தங்களுக்கு சாதகமாக நடந்தால் திமுக வாயை பொத்திக்கொண்டு இருக்கும். திமுக இரட்டை வேடம் போடவும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக எதற்கும் தயாரான கட்சி. அதனால் அவர்களின் நிலைபாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். ஆர்கே நகரில் எனக்காக பிரசாரம் செய்தவர்கள், இப்போது பதவி இருக்கிற மமதையில் எதை வேண்டுமானாலும் பேசுகின்றனர். காலம் இதற்கு பதில் சொல்லும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பதவிக்காக எடப்பாடி தவழ்ந்தது அனைவருக்கும் தெரியும் - டிடிவி சாடல்

Intro:பதவியில் இருக்கிற மமதையில் என்னைப்பற்றி பேசுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும் - டி.டி.வி. தினகரன் பேட்டி

Body:
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த அமமுக கழக அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,
துரோகத்திற்கு வருங் காலத்தில் எடுத்துக்காட்டாக எடப்பாடி பழனிசாமி இருப்பார். பொய்யை உண்மையாக்கி பேசும் எடப்பாடி பழனிசாமி துரோகத்தை பற்றி பேசுகிறார். அவர் செய்யும் தவறை மறைப்பதற்காக அடுத்தவர்கள் மீது பழியை போடுகிறார். அமமுக இந்த தேர்தலில் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் போட்டியிடுவார்கள். அதற்காக யாரிடமும் பணம் வசூல் செய்ய போவது கிடையாது. மாநகராட்சி மேயரை, கவுன்சிலர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் எதற்கு பணம் வசூலிக்க வேண்டும். எதற்கு இந்த மாற்றம். இவர்களே ஆட்களை தயார்படுத்தி நீதிமன்றத்துக்கு அனுப்பி உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஏற்பாடு செய்கின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் எப்படி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இங்கு ஆட்சியை ஏற்படுத்தினார்களோ அதே போல மஹாராஷ்டிராவிலும் இன்றைக்கு ஜனநாயக படுகொலை நடந்துள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்திருப்பதை ஜனநாய படுகொலை என்று திமுக விமர்சித்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், தங்களுக்கு சாதகமாக நடந்தால் திமுக வாயை பொத்திக்கொண்டு இருக்கும். திமுக இரட்டை வேடம் போடவும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக எதற்கும் தயாரான கட்சி. அதனால் அவர்களின் நிலைபாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். ஆர்கேநகரில் எனக்காக பிரசாரம் செய்தவர்கள், இப்போது பதவி இருக்கிற மமதையில் எதை வேண்டுமானாலும் பேசுகின்றனர். காலம் இதற்கு பதில் சொல்லும். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும் என்றார்.

பேட்டி : டிடிவி.தினகரன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.