தூத்துக்குடி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விளாத்திகுளம் பேரூராட்சியில் 8ஆவது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ராமஜெயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்துள்ளார்.
ஆனால், அவர் 5 வாக்குகள் மட்டுமே பெற்றதை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த ராமஜெயம் வீட்டிற்கு வந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாகத் தெரிகிறது.
தேர்தலில் தோல்வி
இன்று (பிப்.23) அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்கொலை முயற்சி
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வேண்டுமென்றே பொய் வழக்கு: ஜெயக்குமாரின் மகன் குற்றச்சாட்டு