ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் அமைத்த கூட்டணி தொடருகிறது - இல. கணேசன் தகவல்

தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் அமைந்த கூட்டணி தொடருகிறது என்றும், எங்களுக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை எனவும் பாஜக தேசிய குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்
author img

By

Published : Oct 4, 2019, 2:54 PM IST

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடந்தது. பாதயாத்திரையை பா.ஜ.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான இல.கணேசன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அதிமுகவும், பாஜகவும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது அமைத்த கூட்டணி நீடித்து கொண்டு தான் இருக்கிறது. இடைத்தேர்தலில் பணிபுரிவது குறித்து பேசுதற்கு பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதரராவ் ஒரிரு நாளில் எங்களை அழைக்கலாம். மற்றப்படி அதிமுகவுடன் எங்களுக்கு வேறு ஏதும் பிரச்னை இல்லை.

காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைய வேண்டும் என வெளிப்படையாக கூறி வருவதால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பேட்டி

மேலும் அதிமுக அரசு பற்றி பாஜக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது குறித்து கேட்டதற்கு, அவர் கூறியதாவது, அது தவறான கருத்து அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நல்ல நெருக்கமான நட்புறவு இருந்து வருகிறது. வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அதிகம் பெற்றுள்ளார்.

இதற்கு காஷ்மீருக்கு வழங்கி வந்த 370 பிரிவை நாங்கள் நீக்கிய காரணத்தால், வேலூரில் உள்ள தேச பக்தர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது அதிமுகவுக்கு நன்றாகவேத் தெரியும். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் எங்கள் கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றார்.

Intro:அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது - பிரச்சனை இல்லை  - இல. கணேசன் பேட்டி
Body:தூத்துக்குடி

அதிமுகவும், பாஜகவும்  இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது அமைத்த கூட்டணி நீடித்து தான் இருக்கிறது, எங்களுக்கும் வேறு ஏதும் பிரச்சனை இல்லை என்றும்,அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் நல்ல நெருக்கமான நட்பு, உறவு இருந்து வருகிறது.வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெறுவதற்கு 370 பிரிவை நீங்கியது தான் காரணம் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய குழு உறுப்பினர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடந்தது. பாதயாத்திரையை பா.ஜ.க. மூத்த தலைவரும், அக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான இல.கணேசன் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதன் பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசும் போது அதிமுகவும், பாஜகவும்  இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது அமைத்த கூட்டணி நீடித்து தான் இருக்கிறது, இடைத்தேர்தலில் பணிபுரிவது குறித்து பேசுதற்கு பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதரராவ் ஒரிரு நாளில் எங்களை அழைக்கலாம். எங்களுக்குள் வேறு ஏதும் பிரச்சனை இல்லை என்றும், காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைய வேண்டும் என வெளிப்படையாக கூறி வருகிறோம். எனவே, காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற கூடாது. இதில் யார் சொன்னாலும் சொல்லவிட்டாலும் எங்களது தொண்டர்கள் நாங்குநேரி தொகுதியை பொருத்தவரை நிச்சயமாக பணியாற்றுவார்கள். அது கூட்டணியோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் இருக்கிறது. பேசி முடிவு செய்வோம். இதில் பிரச்சினையே இல்லை என்றார்

அதிமுக அரசு பற்றி பாஜக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது குறித்து கேட்டதற்கு

அது தவறான கருத்து அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் நல்ல நெருக்கமான நட்பு, உறவு இருந்து வருகிறது.வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அதிகம். இதற்கு 370 பிரிவை நாங்கள் நீக்கிய காரணத்தால், வேலூரில் உள்ள தேச பக்தர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது அதிமுகவுக்கு நன்றாகவே தெரியும். தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

பேட்டி : இல . கணேசன் பாஜக தேசிய குழு உறுப்பினர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.