தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் ஆறுமுக பாண்டியன், ஒன்றிய மாணவரணிச் செயலாளர் செண்பகராமன் ஆகியோர் தலைமையேற்றனர்.
இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:
- அஇஅதிமுக சசிகலா தலைமையில் இயங்க வேண்டும்.
- சசிகலாவே அதிமுக பொதுச்செயலாளராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
- சசிகலா அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் உரையாடிவரும் சூழலில், தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கட்சியைவிட்டு நீக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் செயலை வன்மையாகக் கண்டித்து தீர்மானம்
- கட்சி அடிப்படை விதிகளுக்கு மாறாக தொடர்ந்து இதே நிலை நீடித்தால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்குத் தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த தீர்மானம்
இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'எம்ஜிஆருக்கே யோசனை சொல்லிருக்கேன்' - சசிகலாவின் ரீ- என்ட்ரி விரைவில்