ETV Bharat / state

தமிழனின் நாகரீகத்தை பறைசாற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு! - Excavation work to be completed by Sept. 30

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மக்கள் வாழ்விடத்தினை கண்டுபிடிக்க 40 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

archology
archology
author img

By

Published : Sep 26, 2020, 10:51 PM IST

தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி கடந்த மே 25ஆம் தேதி தொடங்கியது. இந்த பணி செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு நடைபெறும் இந்த வேளையில் தொல்லியல் இயககுனர் பாஸ்கர் தலைமையில், தொல்லியல் அலுவலர் லோகநாதன் உள்பட ஆய்வு மாணவர்கள் பங்கேற்கும் இந்த அகழாய்வில் மக்கள் வாழ்ந்த இடங்களை தேடி ஆய்வு நகர்ந்தது.

144 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டது. வாழ்விட பகுதிகளை கண்டறிவதற்காக 40 குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் இதுவரை பழங்கால மக்கள் பயன்படுத்திய 500 புலங்கு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுடு மண்ணால் செய்யப்பட்ட 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பும் அறியப்பட்டது.

தமிழ்நாடு தொல்லியல்துறை பாண்டியராஜா கோயிலருகே பல குழிகள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், வீரளபேரி, கால்வாய் செல்லும் இடம், ஆதிச்சநல்லூர் ஊருக்குள் என பல இடங்களில் தற்போது குழி தோண்டினர். இதன் பயனாக முன்னோர்களின் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழங்கால மக்கள் பயன்படுத்திய புலங்கு பொருள்களான மண்பானைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட 21 வடிகால் குழாய்கள், தாயப்பொருள்கள், கூரை ஓடுகள், சுடுமண் பொம்மைகள் வட்ட சில்கள், புகைப்பான்கள், கண்ணாடி மணிகள், இரும்பு கத்தி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள், சதுரங்க காய் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள், கீரல்கள், குறியீடுகள் என 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அகழாய்வு குழிகளை அளவீடு செய்யும் பணிகள் எத்தனை மணல்பரப்புகள் படிந்துள்ளது என்பது குறித்தும் அளவீடுகளை தொல்லியல் இயக்குனர் பாஸ்கர் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த பணி வருகின்ற 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தவுடன் தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்படும்.

முடிவடையும் தருவாயில் அகழாய்வுப்பணி
முடிவடையும் தருவாயில் அகழாய்வுப்பணி

ஆனாலும், ஆய்வாளர்கள் அனைவரும் இதே பகுதியில் ஒரு மாத காலம் தங்கி கணினி பணிகளை முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்கள். தாமிரபரணி கரை இடைச்சங்கம் என்று அழைககப்படுகிறது. விரைவில் தமிழனின் நாகரீகம் வெளிப்படும். இதுபோலவே முதல் சங்கம் நடந்த லெமுரியா கண்டமும் ஆய்வு செய்யபடவேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிககை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.