தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தடைந்தார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஓட்டப்பிடாரம் தொகுதியில் மக்களுக்கு அரசு செய்ய தவறிய விஷயங்களை முன்வைத்து, அதனை சுட்டிக்காட்டி நாங்கள் தேர்தல் பரப்புரை மேற்கொள்வோம். அவர்கள் செய்யாததை நாங்கள் எவ்வாறு செய்வோம் என கூறி வாக்கு சேகரிப்போம். இங்கே நிலத்தடி நீர், நீர் ஆதாரங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டும். அதற்கான தீர்வு என்ன என்பதை வல்லுநர்களுடன், ஆராய்ச்சியாளர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இது தீர்க்க முடியாதது அல்ல. தீர்க்கப்படக் கூடிய பிரச்னை தான்” என்றார்.