ETV Bharat / state

தருவைகுளத்தில் கடத்தப்பட்ட கடல் ஆமைகள் பறிமுதல்!

தூத்துக்குடி: தருவைகுளத்தில் கடத்தப்பட்ட கடல் ஆமைகள் பறிமுதல் செய்து மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

turtles
turtles
author img

By

Published : May 25, 2020, 11:03 PM IST

தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரை பகுதியில் உயிருடன் கடல் ஆமைகள் கடத்தப்படுவதாக மெரைன் காவல்துறையினருக்கு நேற்றிரவு (மே 24) தகவல் கிடைத்தது. இதனை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வனத்துறையினருக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் - வனத்துறையினர் இணைந்து தருவைகுளம் கடற்கரையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சரக்கு வாகனம் ஒன்றில் உயிருடன் பிடிக்கப்பட்ட 5 கடல் ஆமைகளை மீட்டனர். பின் இதனை அவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.

இது தொடர்பாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தூத்துக்குடி ஃபாத்திமாநகரை சேர்ந்த இருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'மண்ணுக்காக உயிர்நீத்த என் மகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி பெற வேண்டுமா?' - ஸ்னோலின் தாயார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.