தூத்துக்குடி அருகே லெவிஞ்சிபுரம் முதல் தெருவைச்சேர்ந்தவர், சுந்தர். இவர், ராஜகோபால் நகர் முதல் தெருவில் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். ஆனால், பால் காய்ச்சுவதற்கு முன்பு இடத்தை விலைக்குக்கொடுத்தவர் கிரயப் பத்திரம் எழுதித்தராமல் சென்றுவிட்டார்.
இந்நிலையில் கட்டியுள்ள வீட்டிற்கு ரூ.2 லட்சம் தரும்படி விற்றவர் கேட்பதாகவும், வேலை எதுவும் இல்லாத நிலையில், கூடுதலாகப்பணம் எதுவும் கொடுக்க முடியாது எனவும் கூறி, இதனால் மன உளைச்சலில் அரசு தனக்கு வழங்கிய ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீயிட்டு எரிக்க முற்பட்டார், சுந்தர்.
அப்போது அவர் மனைவி கைக்குழந்தையோடு வந்து அவரின் செயலைக்கண்டித்தார். அப்போது போலீசார் தடுக்க முயன்றபோது, அவரது மனைவி கன்னத்தில் அறைந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிப்காட் காவல் நிலையத்தில் அவரை விசாரணைக்காக காவலர்கள் அழைத்துச்சென்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தீயிட்டு எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இவர் இதற்கு முன் தூத்துக்குடியில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார்.
இதையும் படிங்க:வெளிநாடுகளில் வேலை எனக்கூறி இலங்கைவாசிகளை சென்னை அழைத்து வந்தவர் கைது