ETV Bharat / state

சாலைப் பணிக்காக தோண்டிய போது எலும்புகள் கண்டெடுப்பு

கொங்கராயகுறிச்சியில் சாலைப் பணிக்காக தோண்டிய போது ஏராளமான பானை ஓடுகள், எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 17, 2022, 7:12 PM IST

தூத்துக்குடி: உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் தான் முதன் முதலில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில், இந்திய தொல்லியல் துறை சார்பில் என எட்டு முறை அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் முதன் முதலில் அகழாய்வு பணிகள் மேற்கொண்ட வெளிநாட்டு ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா என்பவர் ஆதிச்சநல்லூர் உள்பட 37 இடங்களில் தொல்லியல் இடங்கள் என்று குறிப்பிட்டுச் சென்றார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆதிச்சநல்லூர் எதிர்புறம் தாமிரபரணி ஆற்றின் மறுகரையில் சாலைப்பணிகள் மேற்கொண்டபோது ஒரு திரடு பகுதி தோண்டப்பட்டுள்ளது. அந்த திரட்டில் ஏராளமான பழங்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள், புழங்கு பொருள்கள், மண் விளக்குகள், பானைகள் கிடைத்துள்ளன. மேலும், அதன் அருகே ஏராளமான எலும்புகளும் காணப்படுகிறது.

ஏற்கனவே அலெக்சாண்டர் ரியா கூறிய 37 இடங்களில் கொங்கராயகுறிச்சி பகுதியும் ஒன்றாகும். எனவே ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடம் கொங்கராயகுறிச்சியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே கொங்கராயகுறிச்சியில் ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என தொல்லியல் ஆர்வலர் கூறி வருகின்றனர்.

சாலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள்

இதையும் படிங்க: கரூர் கழிவு நீர்த்தொட்டியில் மேலும் ஒருவரின் சடலம் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.