தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி சிவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (39). மதுரை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (46).
இவர்கள் இருவரும் கார் புரோக்கர்கள். இன்று காலை தூத்துக்குடியில் இருந்து உடன்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
சங்கர் காரை ஓட்டிச்சென்றார். ஆத்தூர் தாமிரபரணி ஆற்று பாலத்தில் சென்போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து காரில் இருந்த இருவரும் உடனடியாக இறங்கி உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீவிபத்து காரணமாக ஆத்தூர் பாலத்தில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிற ஆண்டு மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை எச்சரிக்கை!