ETV Bharat / state

குழந்தைகளுக்கு மருந்து மாற்றி கொடுததாக புகார்.. கோவில்பட்டி அரசு மருத்துவமனை விளக்கம் என்ன?

author img

By

Published : Jun 5, 2023, 1:05 PM IST

Updated : Jun 5, 2023, 2:00 PM IST

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தைக்கு மாத்திரையை மாத்தி கொடுத்தால் கை, கால் நடுக்கம் பாதிப்பு வந்துள்ளதாக பெற்றோர்கள் மருத்துவர் மீது புகார் அளித்துள்ளனர்.

Kovilpatti Govt Hospital
கோவில்பட்டி அரசு மருத்துவமனை

"பச்சிளம் குழந்தைக்கு மாத்திரையை மாற்றி கொடுத்த மருத்துவர்"... கோவில்பட்டி நடந்தது என்ன?

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகில் உள்ள புதுக்கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் - சிந்து தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு கடந்த 60 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தைக்கு கடந்த 31 ஆம் தேதி 2 மாதத்தில் போடப்படும் தடுப்பூசியை மருத்துவர்கள் போட்டுள்ளனர்.

மேலும், தடுப்பு ஊசி போட்ட பின்னர் காய்ச்சல் வந்தால் அதற்காக சில மாத்திரைகளை கொடுத்து, அதனை எடுத்துக் கொள்ளும்படி பணியில் இருந்த மருத்துவர் மகேஸ்வரன் - சிந்து தம்பதியினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையும் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் வீட்டிற்கு சென்றதும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அத்தம்பதியினர் அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். அதைக் கொடுத்த சிறிது நேரத்தில் குழந்தையின் கை, கால்கள் நிற்காமல் ஆட தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

முதலில் குழந்தையை பரிசோதனை செய்த ஊழியர்கள் மழை பெய்த காரணத்தினால் நடுக்கம் இருக்கும் என்றும், மீண்டும் அதே மாத்திரையை கொடுக்கும்மாறும் கூறியுள்ளனர். ஆனால் அதன்பின்னரும் குழந்தைக்கு நடுக்கம் நிற்கவில்லை. அதைத் தொடர்ந்து குழந்தையை பரிசோதனை செய்த தனியார் மருத்துவர், குழந்தைக்கு கொடுத்த மாத்திரையை குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அத்தம்பதியினர் அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையை காண்பித்துள்ளனர். அப்போது அந்த மாத்திரையை பரிசோதனை செய்த மருத்துவர் உங்களுக்கு யார் இந்த மாத்திரை கொடுத்தது, இது சளிக்கு வழங்க கூடிய மாத்திரை. அதுவும் 10 வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை என்று கூறியதும் அந்த பச்சிளம் குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது குழந்தைக்கு பிரச்சினை இல்லை. நடுக்கம் நிற்க வேண்டும் என்றால் நரம்பியல் மருத்துவர் தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கடந்த 31 ஆம் தேதி முதல் நேற்று வரை நரம்பியல் மருத்துவர் வந்து சிகிச்சை அளிக்கவில்லை என்பதால் அந்த குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி போட்டு தனது குழந்தைக்கு மாத்திரையை மாற்றி கொடுத்த காரணத்தினால் கை, கால் நடுக்கம் தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும், நரம்பியல் மருத்துவரும் பரிசோதனை செய்யவில்லை என்றும், தனது குழந்தையை காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் குழந்தையின் தந்தை மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர் அகத்தியனிடம் கேட்டபோது, "தடுப்பூசி போட்ட போது மருத்துவர் சரியான மாத்திரை தான் பரிந்துரைத்துள்ளார். இவர்கள் வாங்கியவர்கள் தவறாக வாங்கி சென்றிருக்கலாம். குழந்தைக்கு மாத்திரை வாங்கும்போது வேற சிலருக்கு வாங்கி இருக்கலாம். அதில் மாத்திரையை மாற்றி கொடுத்திருக்கலாம். குழந்தைகள் மருத்துவர் பரிசோதனை செய்து குழந்தை நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நரம்பியல் மருத்துவர் வாரத்திற்கு ஒரு நாள் (திங்கட்கிழமை) மட்டும் தான் வருவதாகவும், அவசரம் என்றால் அழைத்துக் கொள்வோம், கூடுதலாக இங்கே வருகை புரியவும், நிரந்தரமாக நரம்பியல் மருத்துவர் நியமிக்கவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும்" தெரிவித்தார்.

தலைமை மருத்துவர் விளக்கம் குறித்த குழந்தையின் தந்தை மகேஸ்வரனிடம் கேட்ட போது, "தங்கள் குழந்தையை தவிர வேறு யாருக்கும் மருந்து மாத்திரை வாங்கவில்லை" என்று தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக நரம்பியல் மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது தடுப்பு ஊசி போட்ட குழந்தைக்கு மாத்திரை மாற்றி கொடுத்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Afghanistan Poison Attack: ஆப்கானில் பள்ளி சிறுமிகள் மீது விஷ தாக்குதல்.. 80 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

Last Updated : Jun 5, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.