ETV Bharat / state

மூதாட்டியை கழிவறையில் அடைத்து கொடுமை - வளர்ப்பு மகன், மருமகள் கைது - Tuticorin grandma at toilet found by Social Welfare Officers

தூத்துக்குடி: மூதாட்டியை கழிவறையில் வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மூதாட்டி
மூதாட்டி
author img

By

Published : Jan 25, 2020, 7:45 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்தவர் மரியமிக்கேலம்மாள் (95). இவரது வளர்ப்பு மகன் நிகோலஸ் (42), மருமகள் இந்திரா (34). இதனிடையே, நிகோலஸ் இந்திராவுடன் சேர்ந்த தனது வளர்ப்பு தாயை கொடுமைப்படுத்திவந்ததாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன.

இந்தப் புகாரின்பேரில், சமூக நலத் துறை அலுவலர்களும், காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினரும் நிகோலஸ் வீட்டில் ஆய்வுசெய்தனர்.

அப்போது, வீட்டின் கழிவறையில் மரியமிக்கேலம்மாள் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மரியமிக்கேலம்மாள் நிகோலஸின் பெரியம்மா எனவும் தெரியவந்தது.

மூதாட்டியை கழிவறையில் அடைத்து கொடுமை

இதையடுத்து, சமூக நலத் துறையைச் சேர்ந்த அலுவலர் கவிதா, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார்செய்தார். இந்தப் புகாரின்பேரில் முதியோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நிகோலஸ், இந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். இதையடுத்து, வீட்டிலிருந்து மீட்கப்பட்ட மூதாட்டியை காப்பகத்தில் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: வட்டி முரளி வீடு மற்றும் நகைக்கடையில் சோதனை..!

Intro:மூதாட்டியை கழிவறையில் வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் கைது
Body:மூதாட்டியை கழிவறையில் வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் கைது

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மூதாட்டியை கழிவறையில் வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி கோட்ஸ் நகரை சேர்ந்தவர் நிகோலஸ் (வயது 42). இவரின் மனைவி
இந்திரா (34). இவர்கள் வீட்டில் உள்ள மூதாட்டியை கணவன் -மனைவி இருவரும் சரியாக
பராமரிக்காமல் கொடுமைப்படுத்தி வருவதாக மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள்
வந்தன. அதன்படி சமூக நலத்துறை அதிகாரிகள், துணைகாவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நிக்கோலஸ் வீட்டில் ஆய்வு செய்தனர்.
அப்போது அவருடைய வீட்டின் கழிவறையில் 95 வயதான மூதாட்டி அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் கழிவறையில் இருந்த மூதாட்டி மரியமிக்கேலம்மாள்(வயது 95) என்பதும், நிக்கோலசின் பெரியம்மா என்பதும் தெரியவந்தது. மிக்கேலம்மாளை
சரியாக பராமரிக்காமல் உணவு, உடைகள் வழங்காமல் வைத்திருந்தது
தெரியவந்தது.
இதனையடுத்து சமூக நலத்துறையை சேர்ந்த அதிகாரி கவிதா, தூத்துக்குடி
தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நிகோலஸ், அவரின்
மனைவி இந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அந்த
மூதாட்டியை மீட்டு தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்திரா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி
வருவது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.