தமிழ்நாட்டில் பல இடங்களில் விவசாயம், குடிநீர் போன்ற உபயோகங்களுக்காக அரசு, தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளிலும், சுற்றுச்சுவர் இல்லாத கிணறுகளிலும் கவனக்குறைவாகத் தவறி விழுந்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக உபயோகமற்ற கிணறுகளை மூடவும், பயன்பாட்டிலுள்ள கிணறுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "அரசின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட துறைகள் மூலமாக பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதுவரையில் சுமார் மூன்றாயிரம் ஆழ்துளைக் கிணறுகளும், ஆயிரம் கிணறுகளும் கண்டறியபட்டுள்ளன. இதில் பயன்பாட்டில் இல்லாத 850 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு மூடபட்டுள்ளன. மேலும், 85 கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து மேல் மூடிகள் கொண்டு மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 500 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றை மூட கோரிக்கை!