ETV Bharat / state

மது கடத்தல் - தூத்துக்குடியில் 7 பேர் கைது

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே சட்டவிரோதமாக மது கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்த மதுவிலக்கு காவல் துறையினர், அவர்களிடமிருந்து 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

author img

By

Published : Dec 26, 2019, 11:40 PM IST

alcohol seized 7 arrested in
alcohol seized 7 arrested in

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை (27ஆம் தேதி), வரும் 30ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த இரண்டு தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செயல்படும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் மாலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசியத் தகவலையடுத்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் பிரதாபன் உத்தரவின்பேரில், கோவில்பட்டி மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் குமாரவேல் அறிவுறுத்தலின்படி மதுவிலக்கு காவலர்கள் மாலையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

மது பாட்டில்களைப் பறிமுதல் செய்யும் காவல் துறையினர்

இந்த வாகனச் சோதனையின்போது கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அடுத்துள்ள புதூர் பகுதி வழியாக சென்ற காரை நிறுத்தி மதுவிலக்கு காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திசெல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, காரிலிருந்த புதூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண், எட்டயபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிக்கண்ணன், பாலகிருஷ்ணன், முத்துகுமார், கழுகுமலையைச் சேர்ந்த பூமிநாதன், சண்முகையா ஆகிய ஏழு பேரை கைது செய்த மது விலக்கு காவல் துறையினர், அவர்களிடமிருந்து மொத்தம் 313 மதுபாட்டில்கள், கார், பைக், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க : இந்த தசாப்தத்தின் மிகப் பிரலமான டீனேஜர் யார் தெரியுமா ?

Intro:சட்டவிரோதமாக, கோவில்பட்டி அருகே மதுவிற்ற 7 பேர் கைது
Body:சட்டவிரோதமாக, கோவில்பட்டி அருகே மதுவிற்ற 7 பேர் கைது

தூத்துக்குடி

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற 7 பேரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், அவர்களிடம் இருந்து 313 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கார், மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் கிராமப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நாளை (27ம் தேதி) மற்றும் வரும் 30ம் தேதி என 2 கட்டமாக நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த 2 தேதிகளிலும் கிராமப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செயல்படும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் மாலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதியான விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை கண்காணிப்பாளர் பிரதாபன் உத்தரவின்பேரில் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் குமாரவேல் அறிவுறுத்தலின்படி மதுவிலக்கு காவலர்கள் மாலையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த வாகன சோதனையின்போது கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அடுத்துள்ள புதூர் பகுதி வழியாக சென்ற காரை நிறுத்தி மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் எட்டயபுரத்தை சேர்ந்த குணசேகரன் கோவில்பட்டியை சேர்ந்த மாரிக்கண்ணன், பாலகிருஷ்ணன், முத்துகுமார், கழுகுமலையை சேர்ந்த பூமிநாதனை மற்றும் சண்முகையா 7 பேரிடம் இருந்து மொத்தம் 313 மதுபாட்டில்கள் மற்றும் கார், பைக், மொபட் ஆகியவைகளையும் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.