ETV Bharat / state

5ஆவது நாளாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்! - வாயில் கருப்புத் துணி

தூத்துக்குடி: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கைவிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு பேரணியாகச் சென்றனர்.

medical students protest
author img

By

Published : Aug 7, 2019, 6:47 PM IST

தூத்துக்குடியில் மருத்துவப் படிப்பில் தேசிய நிறைவுநிலைத் தேர்வுக்கு (நெக்ஸ்ட்) எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கைவிட வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று வாயில் கறுப்புத் துணி கட்டியும், சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல் மருத்துவமனை வளாகம் வரை சுமார் 5 கி.மீ. தூரம் பேரணி நடைபெற்றது.

பேரணியில் மாணவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பலகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கமிட்டுச் சென்றனர். இது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில், "இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்கக் கூடாது, தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இன்று பேரணியில் ஈடுபட்டோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்" என்றார்.

தூத்துக்குடியில் 5ஆவது நாளாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

Intro:தேசிய மருத்துவ மசோதாவை கைவிட வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் வாயில் கருப்புத் துணி, கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணி - கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என எச்சரிக்கை
Body:
தூத்துக்குடி

மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் நுழைவுத்தேர்வை புகுத்தக்கூடாது, இணைப்பு படிப்புகளை கொண்டுவரக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தின் 5-வது நாளான இன்று வாயில் கருப்புத்துணி கட்டியும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் மருத்துவ மாணவர்கள் பேரணியாக சென்றனர். இந்த பேரணி மருத்துவக்கல்லூரி முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை நடைபெற்றது.
பேரணியில் மாணவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பலகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கமிட்டு சென்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவகல்லூரி மாணவர்கள் சங்க மாணவர் ஒருவர் கூறுகையில், இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்க கூடாது, தேசிய மருத்துவ வரைவு கல்விக் கொள்கை- 2019ஐ திரும்பப் பெற வேண்டும். நவீன அறிவியல் மருத்துவப் படிப்பை படிக்காதோர், மருத்துவராக பணி செய்ய உரிமம் வழங்கக் கூடாது. மருத்துவக் கல்வியை கார்ப்பரேட், வணிகமயமாக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பேரணியாக செல்கிறோம். 5-வது நாளாக நடைபெறும் மருத்துவ மாணவர்களின் இந்த போராட்டம் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை சுமார் 5 கி.மீ. தொலைவு இந்த பேரணி நடைபெறுகிறது என்றார்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.