ETV Bharat / state

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 54 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

POCSO Act: தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 54 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 12:38 PM IST

தூத்துக்குடி: புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது முதியவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கை அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா புலன் விசாரணை செய்து, கடந்த 18.06.2020 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், நேற்று (டிச.14) குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் காவலர் முத்துலெட்சுமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் அறுவை சிகிச்சை கருவிகளை சிறுவன் சுத்தப்படுத்திய விவகாரத்தில் நிருபரிடம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.