ETV Bharat / state

மழைக்கு 47 வீடுகள் முழுமையாகச் சேதம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 47 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்ததாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி
author img

By

Published : Nov 25, 2019, 11:29 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 'தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான 637 குளங்களில் 102 முழுமையாக நிரம்பியுள்ளது' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், '50 குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற குளங்கள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் ஆறு மற்றும் குளம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை ஆற்றின் கரையோரங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

மேலும், 'தற்போது பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 47 வீடுகள் முழுமையாகச் சேதம் அடைந்துள்ளது. 257 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர்!

Intro:தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு 47 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது - ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி.

Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடந்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 637 குளங்களில் 102 முழுமையாக நிரம்பியுள்ளது. 50 குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற குளங்கள் நிரம்பி வருகிறதால் பொதுமக்கள் ஆறு மற்றும் குளம் பகுதிகளில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை ஆற்றின் கரையோரங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுதும் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை அகற்றுவதற்கு தற்காலிக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 4 இடங்களில் குழாய்கள் அமைத்து மழைநீர் அகற்றப்படுகிறது. நிரந்தரமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருச்செந்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3ஆயிரம் டன் உரம் இருப்பு உள்ளது. இதனால் உரத்தட்டுப்பாடு இல்லை. படைப்புழு தாக்குதலிலிருந்து பயிர்களை காப்பற்றக்கூடிய  மருந்துகள் இருப்பில் உள்ளது.

தற்போது பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 47 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. 257 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளது. டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில்  1880 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 252 குளங்களில் 1500 ஹெக்டேர் நிலப்பரப்பில் 27.75 கனமீட்டர் மணல் தூர்வாரப்பட்டுள்ளது. ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் செல்வதைத் தடுக்கும் விதமாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

பேட்டி : சந்தீப்நந்தூரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.