ETV Bharat / state

தூத்துக்குடி - கேரளா: சிக்கியது ரூ. 1,000 கோடி மதிப்புடைய 400 கிலோ கொக்கைன்! - drug trafficking in tuticorin

தூத்துக்குடி: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சிக்கிய ரூ.1,000 கோடி மதிப்புள்ள 400 கிலோ கொக்கைன் போதைப் பொருள்கள், கேரளாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்தது மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

tuticorin
போதை பொருள்
author img

By

Published : Apr 22, 2021, 11:36 AM IST

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த சரக்கு கப்பல் ஒன்றில் கொக்கைன் போதைப் பொருள் கடத்தவிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, புலனாய்வுத் துறை அலுவலர்கள், சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எக்ஸ்பிரஸ் - கோட்டபாக்ஸி எனும் பெயர்கொண்ட பனாமா நாட்டு கப்பல் பெல்ஜியம், பிரேசில், இலங்கை வழியாக தூத்துக்குடிக்கு 8 சரக்கு பெட்டகங்களில் மரத்தடிகளை ஏற்றி வந்திருந்தது.

drug seized at Tuticorin
தூத்துக்குடிக்கு வந்த பிரேசில் கப்பல்

இதில் 6 பெட்டகங்கள் டி.எஸ்.ஏ. தனியார் நிறுவனத்துக்கும், 2 பெட்டகங்கள் நவசேவா எனும் தனியார் நிறுவனத்துக்கும் வந்திருந்தது. கப்பலில் நடத்தப்பட்ட பல மணி நேரச் சோதனையில், மரத்தடிகள் மத்தியில் 9 கருப்பு நிற பேக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், சுமார் 400 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப் பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

cocaine
மரக்கட்டைகளுக்குள் போதை பொருள் கடத்தல்

தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அலுவலர்கள், விசாரணையை நடத்தினர்

அதில், "தென்காசியில் பிரானூர் பார்டரில் உள்ள "ஜெயசக்தி டிம்பர்ஸ்" எனும் முகவரிக்குப் போதைப்பொருள் அடங்கிய கண்டெய்னர் பெட்டியில் மரத்தடிகள் வந்திருப்பது தெரியவந்தது. மேலும், போதைப்பொருளை அனுப்பியவரின் முகவரி போலியானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கப்பல் கடந்த பிப்ரவரி மாதம் பனாமா நாட்டிலிருந்து கிளம்பி பெல்ஜியம் வழியாகக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி இலங்கை வந்துள்ளது. பின்னர் இலங்கையிலிருந்து கண்டெய்னர் பெட்டியில் மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வந்ததாகக் கூறப்படுகிறது.

cocaine
கொக்கைன் போதை பொருள்

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கிற்குப் பிறகு, மத்திய உளவுப் பிரிவு, வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிர சோதனை நடத்திவருவதால், கடல் வழியாகக் கேரளாவுக்குப் போதைப்பொருளைக் கடத்த முயற்சிகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்குக் கடலில் போதைப் பொருளைக் கொண்டு வந்துவிட்டு, பின்னர் சாலை மார்க்கமாகக் கேரளாவுக்குக் கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினரும், கியூ பிரிவு காவல்துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரும் ஏமாற்றத்துக்குள்ளான தொழிலதிபர் கதை - சிக்குவார்களா அரசு அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.