தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியநாயகிபுரத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி பப்பாளி (20), முனீஸ்வரன் (21) ஆகியோர் முருகேசன்(36) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் செப்டம்பர் 13ஆம் தேதி கீழகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன் (20) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் ஒப்புதலின் பேரில் பப்பாளி, முனீஸ்வரன், பாலமுருகன் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குமரியில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது!