ETV Bharat / state

’கரோனாவை அன்னை அழிப்பாள்’ - பத்தாம் திருவிழாவில் ஆயர் ஸ்டீபன் மறையுரை

தூத்துக்குடி: உலக பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவில் இந்தாண்டு பக்தர்கள் இல்லாமலேயே பத்தாம் திருவிழா திருப்பலி நிறைவேறியது.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவில்

author img

By

Published : Aug 5, 2020, 3:53 PM IST

நாட்டின் புகழ்மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்று தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயம். இதன் ஆண்டுப்பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். ஏழுகடல் துறை அடைக்கலத்தாய் என்று தூத்துக்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படும் பனிமய மாதா பேராலயத்தின் 438ஆம் ஆண்டுப் பெருவிழா இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியின் திருவிழாவாக கொண்டாடப்படும் பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா பொதுமக்கள் பங்கேற்பின்றி கடந்த ஜூலை 26ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் ஜெபமாலை, மறையுரை மற்றும் திருப்பலி நடைபெற்று வந்த நிலையில் ஆண்டு பெருவிழாவின் நிறைவு நாளான இன்று (ஆகஸ்ட் 5) கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஆடம்பர கூட்டுத் திரும்பலி பக்தர்களின்றி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் மறையுரையில், தூய பனிமய மாதா அன்னை பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்பதற்காக ஆசையோடு காத்திருக்கிறாள். ஆனால் பக்தர்களை காணோம். கரோனா வைரஸ் என்ற அரக்கன் அன்னைக்கும் பக்தர்களுக்குமான இடைவெளியை ஏற்படுத்தி விட்டானோ என்ற அச்சம், சந்தேகம் உணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் அது உண்மையில்லை பனிமய மாதா கரோனா அரக்கனை நிச்சயம் அழிப்பாள். கரோனாவை அழித்து நம்மை‌ காப்பதற்காக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சமூக ஊடகங்கள் வழியே வந்து அருள் செய்கிறார் என பேசினார்.

தொடர்ந்து ஆலய பங்குதந்தை குமார் ராஜா மறையுரை நிகழ்த்தினார். மறைமாவட்ட முதன்மை குரு, பங்குதந்தைகள் மட்டுமே கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் நாள்தோறும் சிறப்பு வழிபாடும், திருப்பலியும் நடைபெற்றது. பேராலய திருவிழாவின் சிறப்பு திருப்பலி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சியிலும், யூடியூப்பிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா

இந்த திருவிழாவில், இன்று (ஆகஸ்ட் 5) மாலை நடைபெறும் பொன் மகுடம் தரித்த தூய பனிமயமாதாவின் திருவுருவ சப்பரப்பவனி கரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி நிறைவடைந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது.

இதையும் படிங்க:பனிமய மாதா ஆலய திருவிழாவில் கட்டுப்பாடு: கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.