திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழ பாலம் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் தலையாமங்களம் பாலு பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இப்போராட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்கவில்லை என்றும் அரசு பணிகள் அனைத்தும் கையூட்டு பெற்று கொண்டு வேலை வழங்கி வருவதாகவும் , எங்கே எனது வேலை எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்