ETV Bharat / state

திருவாரூரில் இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை - எலி மருந்து

குடவாசல் அருகே குழந்தையின் தங்க சங்கிலியை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளம் பெண், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த சாதனா
உயிரிழந்த சாதனா
author img

By

Published : Jul 10, 2021, 4:05 PM IST

திருவாரூர்: நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சாதனா(20). சாதனா மகளிர் சுய உதவி குழுவின் கடன் தவணை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த 6ஆம்தேதி, தீபமங்கலம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது பிறந்தநாள் விழாவின்போது குழந்தையின் தங்க சங்கிலி காணாமல் போனதாக கூறப்படுகிறது.

தங்க சங்கிலியை திருடியதாக குற்றச்சாட்டு

இந்நிலையில் தங்க சங்கிலியை சாதனா திருடி சென்றுவிட்டதாக, அவரது உறவினர்கள் கருதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாதனாவை அலைபேசியில் அழைத்து உறவினர்கள் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சாதனா, மணக்கால் அய்யம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

உயிரிழந்த சாதனா
உயிரிழந்த சாதனா

எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மயங்கி விழுந்த சாதனாவை மீட்ட உறவினர்கள், திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சாதனா, சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 10) உயிரிழந்தார். இது குறித்து குடவாசல் காவலர்கள் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நண்பரை பார்க்க் சென்றவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.