உலகம் முழுவதும் பரவிவரும் பெருந்தொற்று நோய் ஏற்படுத்தும் கரோனா வைரஸ் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியார்களுக்கு முன்பைவிட பணி இருமடங்காக கூடியுள்ளது.
இந்நிலையில் காவலர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் முகக் கவசம், கையுறை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நடைபெற்றது. இதில் திமுகவின் நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் கலந்துகொண்டு திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட கரோனா வாரியர்ஸ்ஸூக்கு முகக் கவசம், கையுறை, மதிய உணவு வழங்கினார்.
இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கரோனா வைரசை தடுக்கும் விதம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர் பலர் கலந்துகொண்டனர்.