திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் கிராமத்தில் கிரீன்நீடா, அமிர்த புண்ணிய வேதாந்தா தோட்டத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவானது "பசுமை தீபாவளி கொண்டாடுவோம்" என்ற விழிப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஷ்னுபிரியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் பேசிய அவர், "நாங்கள் வெடிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் சுற்றுசூழல் மாசுபடுவதை பாதுகாப்பதற்காகதான் தீபாவளியை புதுமையான முறையில் வெடியில்லா பசுமை தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்றும்" தெவித்தார்.
இதையும் படிங்க: