திருவாரூர் மாவட்டம் பேரளம் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் தச்சு வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (34 ) கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தனது வீட்டின் அருகே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் தனலட்சுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) சிகிச்சைப் பலனின்றி தனலட்சுமி உயிரிழந்தார்.
கரோனா ஊரடங்கால் வேலையிழந்த அவர் தனியார் நிதி நிறுவனம், தனி நபர்களிடம் கடன் வாங்கியதாகவும் அவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திருப்பி கேட்டு தகாத வார்த்தைகளால் அவர்கள் பேசியதைத் தொடர்ந்து மனமுடைந்த தனலட்சுமி தீக்குளித்தாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பேரளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...வாடகை பிரச்னையில் தீக்குளித்த சம்பவம்: சிசிடிவி காட்சி வெளியீடு!