ETV Bharat / state

சரக்கு வாகனம் ஏற்றி பெண் கொலை; நான்கு பேர் கைது! - திருவாரூர் அண்மைச் செய்திகள்

திருவாரூர் : சரக்கு வாகனம் ஏற்றி பெண்ணைக் கொலை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய பெண்ணின் கணவரைத் தேடி வருகின்றனர்.

திருவாரூர் அருகே சரக்கு வாகனம் ஏற்றி பெண் கொலை; நால்வர் கைது

author img

By

Published : May 25, 2021, 7:12 AM IST

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருடைய கணவர் விஷ்ணு பிரகாஷ்(38). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜெயபாரதி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தப்பளாம்புலியூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ஜெயபாரதி வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர் மீது சரக்கு வாகனம் ஒன்று மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய திருவாரூர் தாலுகா காவல்துறையினர், முதலில் விபத்து வழக்காக பதிவு செய்தனர். ஜெயபாரதியின் உறவினர்கள், இது விஷ்ணு பிரகாஷ் திட்டமிட்டு நடத்திய கொலை எனப் புகாரளித்தனர்.

இதையடுத்து, திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கயல்விழி விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜெயபாரதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளர் செந்தில் குமார், வாகன ஓட்டுநர் பிரசன்னா, ஜெகன், ராஜா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்கு மூளையாக செயல்பட்ட, தலைமறைவாக உள்ள ஜெயபாரதியின் கணவர் விஷ்ணு பிரகாஷைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : கரோனா வார் ரூம் ஆய்வு: முதலமைச்சர் பாணியில் அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.