திருவாரூர் மாவட்டத்திலுள்ள புத்தகலூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா (45). இவரும், இவரது மகன் ஹரிஹரனும் இருசக்கர வாகனத்தில் நன்னிலம்- கும்பகோணம் சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது பின்பக்கமாக வந்த அரசுப் பேருந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மஞ்சுளா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து இறந்தார். மேலும் ஹரிஹரன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.