திருவாரூர் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட 30ஆவது வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நெய்விளக்கு தோப்பு என்ற பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. ஏற்கெனவே இந்த கிடங்கில் உள்ள குப்பைகள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் இன்று நண்பகல் அந்த குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட புகையானது நெய்விளக்குத் தோப்பு, நேதாஜி சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதி வரை பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் சென்ற திருவாரூர் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புடன் தீயை அணைத்தனர். குப்பைக் கிடங்கில் தீ விபத்து அடிக்கடி ஏற்படுவதால், அதை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரும்பு தோட்டத்தில் திடீர் தீ - 21 ஏக்கர் கரும்பு பயிர்கள் நாசம்