திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் வடிவழகன் தலைமையில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், திருமாவளவன் குறித்து அவதூறு பரப்புவதாக ஹெச். ராஜா, நடிகை காயத்ரி ரகுராம், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புத் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.