ETV Bharat / state

அரசு அலுவலர்களை வேலை செய்ய வைத்த தாம்பூலத் தட்டு!

திருவாரூர்: மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா பொதுபணித்துறை, கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட வருமாறு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பு விடுத்ததன் எதிரொலியாக அரசு அலுவலர்கள் இன்று நேரில் வந்து பார்வையிட்டு வாய்க்காலை அகலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அரசு அலுவலர்களை வேலை செய்ய வைத்த தாம்பூல தட்டு
author img

By

Published : Jun 8, 2019, 9:44 PM IST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் வடவாறு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கலை நம்பி சுற்றுவட்டார விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வாய்க்காலின் இருப்புறத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளதால், பாசன வசதி பெறமுடியவில்லை என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை அகலப்படுத்தி தருமாறும் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்தார்.

அரசு அலுவலர்களை வேலை செய்ய வைத்த தாம்பூல தட்டு

பின்பு அங்கிருந்து பொதுப்பணித்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்புகொண்டு ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் வரவில்லை. இதையடுத்து அவர் தாம்பூல தட்டுடன் அரசு அலுவலர்களை நேரில் சந்தித்து வாய்க்காலை ஆய்வு நடத்த வருமாறு கோரிக்கை வைத்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எம்எல்ஏ அழைப்பை ஏற்ற பொதுப்பணித்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்ததோடு, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி வாய்க்காலை அகலப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர்.

திருவாரூர்
சம்பத் முருகன்

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா பொதுபணித்துறை, மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளை வெத்தலை,பாக்கு வைத்து அழைத்ததையடுத்து வாய்க்காலை பார்வையிட வந்த அதிகாரிகள் விரைவில் வாய்க்காலை அகலபடுத்தி தருகிறோம் என உறுதியளித்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் வடவாறு வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலின் நீர்பாசனம் மூலம் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பயன்பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் வாய்காலின் இருப்புறமும் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துள்ளன. இதன் தொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
இதை அறிந்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அப்பகுதிக்கு சென்று வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்தார். அப்போது பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை வடவாறு வாய்க்கால் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்த கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆலோசனைக்கு வராததால் டி.ஆர்.பி ராஜா, மன்னார்குடியில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியணை நேரில் சென்று தாம்பூல தட்டில் வெற்றிலை , பாக்கு , வாழைபழம் வைத்து, ஆய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து இன்று பொதுப்பணித்துறை அதிகாாிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வடவாறு குறுகியதை உடனடியாக அகலபடுத்தி தருகிறோம் என விவசாயிகளிடம் உத்திரவாதம் அளித்தனர். விவசாயிகளுக்கு முழுமையாக பாசனத்திற்கு தண்ணீரை பிாித்து கொடுப்போம் என அதிகாாிகள் தொிவித்தனா்.

Visual - FTP
TN_TVR_02_MLA_VAO_VISIT_7204942
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.