திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திமுகவினர் மற்றும் உதயநிதி ரசிகர்கள் அனைத்து மாவட்டத்திலும் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட உதயநிதி ரசிகர் மன்றம் மற்றும் திருவாரூர் திமுக நகரக் கழகம் சார்பில் நூறுக்கும் மேற்பட்டோர், திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
![udhayanithi birthday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-udhayanithi-birthday-vis-script-7204942_27112019132628_2711f_1574841388_861.jpg)
இந்நிகழ்ச்சியில், திமுக நகர கழகச் செயலாளர் வாரை பிரகாஷ், உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் மணி உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: