ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல்: 7 பேர் படுகாயம் - முன்விரோதம் காரணமாக இரு பிரிவினற்கிடையே தாக்குதல்: 7 பேர் படுகாயம்

திருவாரூர்: மன்னார்குடி அருகே இரு பிாிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

two-community-peoples-attack-in-thiruvarur
author img

By

Published : Oct 29, 2019, 1:22 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திபாவளி பண்டிகை தினத்தன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அறிவழகன், கலைச்செல்வன், விமலா, வெள்ளிநாதன் ஆகியோர் வசிக்கும் தெருவிற்குள் சென்று அதே கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன், கருணாகரன், ராஜா, பூமிநாதன் ஆகியோர் அரிவாள், கத்தி, கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 7 பேர் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக வெள்ளிநாதன் என்பவர் திருவாரூர் மருத்துவக் கல்லூாி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். இதுகுறித்து தலையாமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரைக் கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு!

Intro:Body:மன்னார்குடி அருகே ஒரு பிாிவினர் மற்றொரு பிாிவினரை தாக்கியதில் 7 பேர் படுகாயம். அரசு மருத்துவமனையில் அனுமதி .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் இரு பிாிவினாிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது . இன்று திபாவளி பண்டிகையை ஒட்டி தாழ்த்த பட்ட சமுதாயத்தை சேர்ந்த அறிவழகன் (29) , கலைச்செல்வன் (50) , விமலா (32), வெள்ளிநாதன் (42) ,குகன் ( 27) , விலவபதி ( 45), அலக்சாண்டர் (19) ஆகியோர் தீபாவளி கொண்டாடிக்கொடிருந்த போது இவர்களது தெருவிற்கு சென்று அதே கிராமத்ததை சேர்ந்த கதிரேசன் , கருணாகரன் ,ராஜா , பூமிநாதன் , கவியரசன் , மாறன் ஆகியோர் அறிவாள் மற்றும் கத்தி ,கட்டைகளால் தாக்கி உள்ளனர் . இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 7 பேரும் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர். மேல்சிகிச்சைக்காக வெள்ளிநாதன் திருவாரூர் மருத்துவ கல்லூாி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார் .இது குறித்து தலையாமங்கலம் காவல்துறையினர் விசாரணைய செய்து வருகின்றனர் . மேல்சிகிச்சைக்கு அனுப்பபடும் நோயாளி ஆம்புலன்ஸில் அழைத்து செல்லாமல் அவரது இருசக்கர வாகனத்திலேயே சென்றது மருத்துவமனை நிர்வாகம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கியது .Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.