தீபாவளி பண்டிகை நவம்பர் 14ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு அறுவுறுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், திருவாரூரில் முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்கான புத்தாடை மற்றும் அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் குவிந்தனர். மக்கள் அதிக அளவில் கூட்டம் கூடியதால், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறந்தன.
முகக்கவசம், தகுந்த இடைவெளியின்றி கடைவீதி பகுதியில் குவிந்ததால் கரோனா தொற்று பரவும் அச்சம் எழுந்துள்ளது. திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு தகுந்த இடைவெளி மற்றும் முகக் கவசத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டத்தை எதிர்த்து நாகையில் 50 இடங்களில் போராட்டம் - எம்பி செல்வராஜ்