ETV Bharat / state

நன்னிலம் அருகே 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - விவசாயிகள் கண்ணீர்

author img

By

Published : Jan 18, 2021, 7:03 AM IST

திருவாரூர்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெய்த கனமழை காரணமாக, நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

paddy damage
paddy damage

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். நெற்பயிர்கள் முழுவதும் அறுவடைக்கு தயாரான நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த கனமழையால் நெல் மணிகள் முழுவதும் நீரில் மூழ்கின.

paddy damage
paddy damage

குறிப்பாக, பேரளம், திருமிச்சியூர், இஞ்சிகுடி, கோவிந்தச்சேரி, பண்டாரவாடை உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியதால், அந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

paddy damage
paddy damage

சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், இது போதுமானதாக இல்லை என்பதால் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கினால் மட்டுமே இதுவரை செலவு செய்த செலவுகளை ஈடுகட்ட முடியும் என கண்ணீர் மல்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

paddy-damage

மேலும், ஏக்கர் ஒன்றுக்கு சாதாரணமாக மூன்று மணி நேரம் ஓடக்கூடிய அறுவடை இயந்திரம், தற்போது விவசாய நிலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 5 மணிநேரம் ஓடுகிறது. எனவே, அறுவடை இயந்திரத்தை ஒரு மணி நேரத்துக்கு ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக குறைத்தால் உதவியாக இருக்கும் என மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.