திருவாரூர்: ஓவர்குடி கிராமத்தில் தீயில் கருகிய வீடுகளை எம்எல்ஏ மாரிமுத்து ஆய்வு செய்து நிதியுதவி வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஓவர்குடி கிராமத்தில் அருகாமையில் உள்ள நிலப்பகுதியில் காய்ந்துபோன சருகுகளுக்கு தீ வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்து தீப்பொறி அருகாமையில் உள்ள கூரை வீடுகளில் விழுந்ததில் மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்குப் பரவி ஏழு வீடுகள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தன.
இதில் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்நிலையில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வந்த பாதிக்கப்பட்ட மக்களை திருத்துறைப்பூண்டி சட்டபேரவை உறுப்பினர் மாரிமுத்து நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.
இதையும் படிங்க: கரோனா விவரங்களை அறிந்துகொள்ள புதிய இணையதளம் ஏற்பாடு!