திருவாரூர் நகரில் கமலாம்பிகா கூட்டுறவு வங்கி நிர்வாக குழு தேர்தல் இன்று காலை முதல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக என இருமுனைப் போட்டி நிலவியது. தேர்தலில் மொத்தம் 45 ஆயிரம் உறுப்பினர்களில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். மேலும், வாக்காளர் பட்டியலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருந்தது.
வாக்காளர் பட்டியலில் கருணாநிதி பெயர் இந்த நிலையில் வாக்களிப்பதற்காக ஐயப்பன் என்பவரை திமுக-வினர்அழைத்து வந்தனர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஐயப்பன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. காவல் துறையினர் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.திமுகவினரை அதிமுகவினர் தாக்குதல்