திருவாரூர் மாவட்டத்தின் 34ஆவது ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் பதவியேற்று கொண்டார்...
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவாரூர் மாவட்டத்தில் உழைக்கும் மக்களும், விவசாயிகளும் அதிகம் வாழும் மாவட்டமாகும். பிறந்தாலே முக்தி தரும் பெருமைமிகு மாவட்டமாக விளங்கும் திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். தற்போது கரோனா தொற்று நோய் நாடு முழுவதும் பெரிய பிரச்சினையாக உள்ளது.
இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சிசெய்வேன். மேலும் அரசின் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க துரிதமாக நடவடிக்கை எடுப்பேன்.
நான் 2013இல் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் 37ஆவது ரேங்க்-இல் வெற்றிபெற்றேன். பொள்ளாச்சியில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்தேன். பின்னர் கோவை மாவட்டத்தில் வணிக வரித்துறை இணை ஆணையராகவும் பணியாற்றினேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.5 லட்சம் மோசடி செய்துவிட்டு பப்ஜி மதன் தலைமறைவு!