இந்தியா முழுவதும் ரயில்களில் டீசல் இன்ஜின் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக மின்சார ரயிலாக மாற்றி இயக்குவதற்காக முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
இதில் திருவாரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக கடலூர் வரை 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதையில் மின்தடம் அமைக்கும் பணி கடந்தாண்டு தொடங்கி தற்போது முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று திருவாரூரிலிருந்து கடலூர் வரை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் ரயில்வே அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் ரயில் இன்ஜினுக்கு மாலையிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
மேலும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, ரயில் சோதனை முடிவிற்குப் பின்னர் விரைவில் மின்சார ரயில் போக்குவரத்து அமையும்பட்சத்தில் நேரம் பெருமளவில் குறையும் என இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்க: ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு!