ETV Bharat / state

தாய்லாந்தில் தவித்த மகன்களை போராடி மீட்ட பாசத்தாய்; ஏஜெண்ட் மீது நடவடிக்கைகோரி தர்ணா! - வெளிநாட்டு வேலை

திருப்பூர் : வெளிநாட்டு வேலை என்று ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிய ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தனது இருமகன்களுடன் மாரியம்மாள் என்பவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

with sons
author img

By

Published : Jul 15, 2019, 6:47 PM IST

திருப்பூர் ஆண்டிபாளையம் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவரது மனைவி மாரியம்மாள். இவர் ஆண்டிபாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மணித்துரை (வயது 23), மணிகண்டன் (21), மணிச்செல்வம் (18) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாரியம்மாள் வேலை செய்த நிறுவனத்தில் திருப்பூர் அவினாசி ரோட்டை சேர்ந்த மனோசங்கரி என்பவர் வேலை செய்து வந்தார். ஒரே நிறுவனம் என்பதால் இருவரும் தோழிகளாகினர். மனோசங்கரியின் கணவர் ரஞ்சித் (35) வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டாக இருந்து வருகிறார். இதனால் மாரியம்மாள் தனது குடும்ப சூழ்நிலை குறித்து மனோ சங்கரியிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் தனது கணவர் மூலம் மணித்துரை, மணிகண்டன் ஆகிய இருவரையும் தாய்லாந்திற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

தோழியை நம்பி ஏமாந்த மாரியம்மாள்:

அதன்படி மாரியம்மாளிடம் இருந்து ரஞ்சித் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுக்கொண்டு, மணித்துரை, மணிகண்டன் ஆகியோரை ஜனவரி மாதம் 21ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு அனுப்பிவைத்தார். அங்கு உள்ள பனியன் நிறுவனத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.40 ஆயிரம் சம்பளம் எனவும் தெரிவித்தார்.

மகன் மணிதாசனுடன் மாரியம்மாள்
மகன் மணிதாசனுடன் மாரியம்மாள்

தாய்லாந்து சென்றதும், ரஞ்சித்துடன் தொடர்புடைய நபர் அவர்களை அழைத்து சென்று அங்கு ஒரு அறையில் அவர்களை தங்கவைத்துவிட்டு சென்றுள்ளார். மூன்று வாரமாக அவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படவில்லை. பின்னலாடை நிறுவனத்திற்கு அந்த நபர் வேலைக்கு அழைத்து செல்லாமல், அங்குள்ள ஒரு ஓட்டலில் காலை முதல் நள்ளிரவு வரை அறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வைத்துள்ளார். மேலும், ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பாடு கொடுத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் சுற்றுலா விசாவில் அழைத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது தொடர்பாக தனது தாயாரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். உடனே மாரியம்மாள் தனது மகன்களின் நிலைமை குறித்து ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

காவல்துறையினர் அலட்சியம்:

இதனால் பதறிப்போன மாரியம்மாள் திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனு குறித்து காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் மணிகண்டனுக்கு அங்கு ஓட்டலில் சாப்பிட வந்த பஞ்சாப்பை சேர்ந்த பரம்ஜித் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தானும், தனது சகோதரனும் ஏஜெண்டு மூலம் ஏமாற்றப்பட்டு ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மகன்களுடன் தர்ணாவில் மாரியம்மாள்
மகன்களுடன் தர்ணாவில் மாரியம்மாள்

பஞ்சாப் நண்பர் உதவி:

இதனால் மனம் இறங்கிய அவர் ரூ.60 ஆயிரம் அனுப்பிவைத்தால் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனை மணிகண்டன் தனது தாயாரிடம் தெரிவித்தார். உடனே அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி பஞ்சாப் காரரின் வங்கி கணக்கிற்கு மாரியம்மாள் பணத்தை அனுப்பிவைத்தார். அதன்பேரில் விமான டிக்கெட் எடுக்கப்பட்டு மணிகண்டன் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி சென்னை வந்து அங்கிருந்து திருப்பூர் வந்து சேர்ந்தார். ஆனால் மணித்துரை தாய்லாந்திலேயே இருந்தார்.

கோரிக்கை மனுவுடன் மாரியம்மாள்
கோரிக்கை மனுவுடன் மாரியம்மாள்

இதன் பின்னர் தாயும், மகனும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் சென்று, தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் மணித்துரையை மீட்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதனையறிந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாய்லாந்தில் க‌‌ஷ்டப்படும் மணித்துரையை இந்தியாவிற்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்திற்கு அனைத்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் மாவட்ட நிர்வாகம், சென்னையில் உள்ள தூதரகத்தில் இருந்து மாரியம்மாளை தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே சுற்றுலா விசா முடிவடைந்ததால் அங்குள்ள தூதரகத்தில் மணித்துரை சரண் அடையும்படியும், மேலும், ரூ.30 ஆயிரம் அனுப்பிவைத்தால், தான் டிக்கெட் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும், ஜாமீன் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்வதாக பரம்ஜித் தெரிவித்தார். அதன்படி சரணடைந்த மணித்துரைக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும், 15 நாட்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து இந்திய தூதரகத்திற்கும், தாய்லாந்து தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணித்துரை அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

சொந்த ஊர் திரும்பிய மணித்துரை:

இதற்கிடையில் மணித்துரைக்கான விமான டிக்கெட்டை எடுத்து வைத்திருந்த பரம்ஜித் அவரை காவல்துறை உதவியுடன் ஜூலை 8ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னை வந்த மணித்துரை அங்கிருந்து ரயில் மூலம் திருப்பூர் திரும்பினார். ரயில் நிலையத்தில் மகனுக்காக காத்திருந்த மாரியம்மாள் தனது மகனை கண்ணீர் மல்க உருக்கமாக வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றார். மகனை பார்த்த தாய்க்கு கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது குறிப்பிடத்தக்கது.

மகன்களுடன் மாரியம்மாள் போராட்டம்:

இந்நிலையில் தங்களை ஏமாற்றிய ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாரியம்மாள் தங்களை ஏமாற்றிய ஏஜென்ட் ரஞ்சித் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தான் செலவழித்த பணத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது இரண்டு மகன்களுடன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.

மகன்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ள மாரியம்மாள்

Intro:தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கியிருந்த தனது இரண்டு மகன்களையும் தன் சொந்த முயற்சியிலேயே மீட்ட நிலையில் தங்களை ஏமாற்றிய ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது இரண்டு மகன்களுடன் மாரியம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Body:திருப்பூர் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் இதில் மூத்த மகன் பணித்துறை மற்றும் இரண்டாவது மகன் மணிகண்டன் இருவரும் நிறுவனங்களில் பணியாற்றி வந்த சூழ்நிலையில் உடன் பணியாற்றிய ரஞ்சித் என்பவரது பழக்கம் கிடைத்துள்ளது இவர் தாய்லாந்தில் உள்ள வணிக நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார் இதனை நம்பிய மாரியம்மாள் தனது இரண்டு மகன்களையும் தாய்லாந்து அனுப்ப 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை ரஞ்சித்திடம் கொடுத்துள்ளார் அதனை கொண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் தாய்லாந்து செல்வதற்கான டிக்கெட் மற்றும் விசா எடுத்து அனுப்பி வைத்துள்ளார் அங்கு சென்ற இருவருக்கும் ஓட்டலில் வேலை வாங்கித் தந்ததுடன் இருவரையும் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றது தெரியவந்தது இதையடுத்து ரஞ்சித் மீது திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார் மேலும் தனது இரண்டு மகன்களையும் தாய் நாட்டுக்கு அழைத்து வர மத்திய மாநில அரசுகளிடம் உதவி கோரி இருந்தார் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார் இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தாய்லாந்தில் சிக்கியுள்ள மாரியம்மன் கோவில் மகன்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என ட்வீட் செய்திருந்தார் இன்னும் தூதரக அதிகாரிகள் பணம் கேட்டு வந்ததால் மீண்டும் 30 ஆயிரம் ரூபாய் தயார் செய்து தனது சொந்த முயற்சியிலேயே தனது மகன்களை மாரியம்மாள் மீட்டு வந்தால் இந்நிலையில் தங்களை ஏமாற்றிய ஏஜென்ட் ரஞ்சித் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தான் செலவழித்த பணத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது இரண்டு மகன்களுடன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.